கிறுக்கல் விழுந்த சிடியில் இருந்து தகவல்களை பெற முடியுமா??
Data Recovery from Damaged DVD/CD files
இன்றைய சூழ்நிலையில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் சி.டி (CD/DVD) தாங்க,
ஆசை ஆசையா எடுத்த பிறந்தநாள் போட்டோக்கள், திருமண நிகழ்ச்சி போட்டோக்கள் அல்லது ஒரு தனிப்பட்ட விஷயங்களை சேகரிக்க வைக்கக்கூடிய ஒரு சி.டி யாக கூட இருக்கலாம். இதிலும் சில நேரங்களில் பெரிய சிக்கல் வந்துவிடும்.
அதாவது சிடிக்கள் பழுதடைந்து போவது அல்லது சிடிகள் ஒன்றோடு ஒன்று உராய்வு மூலமாகவும், தூசி படிதல் போன்ற பல காரணங்களால் அதில் சேமித்து வைத்திருக்க கூடிய தகவல்களை பெற முடியாமல் போகலாம் இந்தப் பிரச்சனையால் நம்மில் பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
இதுபோல கஷ்டப்பட்டு நம்ம சேமிச்சு வச்ச அந்த பைல் எல்லாம் நமக்கு கிடைக்காத போது நமக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்??
அதனால அடையக்கூடிய பாதிப்பு மிக அதிகம் என்று கூட சொல்லலாம். அப்படிப்பட்ட சி.டி-க்களில் இருந்து தகவல்களை எப்படி பெறலாம் அப்படிங்கறதா பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்,
டேமேஜ் சி.டியை கம்ப்யூட்டரில் உள்ள டி.வி.டி பிளேயரில்(DVD PLAYER) போட்டு அதில் உள்ள பைல்களை கம்ப்யூட்டருக்கு காப்பி செய்யும் போது உங்களுக்கு இது போன்ற ஒரு பிழை செய்தி வரலாம் "cannot read from the source desination"
சிடிக்களில் நமக்குத் தெரியாமலேயே பல கீறல்கள் இருக்கும் அல்லது அதன் மீது படிந்துள்ள தூசிகளால் கூட இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே
- முதலில் ஒரு மெல்லிய துணி கொண்டு சிடிக்களை உள்ளிருந்து வெளிப்புறமாக துடைக்கவேண்டும்.
- இரண்டாவதாக சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம் அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்
மேலே கூறிய இரண்டு வழிமுறைகளின்படி சரியாகவில்லை எனில் ஒரு சாப்ட்வேரின் உதவியை நாடலாம் இந்த லிங்கை (https://www.isobuster.com/download.php) பயன்படுத்தி இந்த சாப்ட்வேரை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
கீழே உள்ள வழிமுறைகளின் படி நீங்கள் சி.டி -யில் இருந்து பைல்களை பெற முடியும்
ஒருவேளை சி.டி/டி.வி.டி அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அதிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்றுத்தரும்.
முதலில் இந்த சாப்ட்வேரை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்
Step:1
Step:2
Step:3
Step:4
Step:5
Step:6
Step:7
அடுத்து இதிலிருந்து பைல்களை பெறும் வழிமுறைகளை பார்ப்போம்
Step:1
மீட்டு எடுக்க வேண்டிய ட்ரைவினை செலக்ட் செய்யவும்
Step:2
அதிலுள்ள பைல்கள் இதுபோன்று காண்பிக்கும் சேமிக்க விரும்பும் இடத்தை செலக்ட் செய்து விட்டு Save என்பதனை கிளிக் செய்யவும்
குறிப்பு: இந்த சாப்ட்வேர் ஆனது குறிப்பிட்ட காலம் மட்டும் தான் இலவசமாக வேலை செய்யும் அதன்பிறகு 40 டாலர் (அதாவது தனிப்பட்ட முறையில் பயன்படுத்த) மட்டும் அல்லது 60 டாலர் கொடுத்து பிசினஸ்காகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
Thanks for reading my post