நியான் ஒளி அப்படியென்றால் என்ன ?
முதலில் நாம் நியான் விளக்கை பற்றி தெரிந்து கொள்வோம். நியான் விளக்குகள் பொதுவாக பிரகாசமாக ஒளிரும் தன்மை கொண்டவை, இவை மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய கண்ணாடி குழாய்கள் அல்லது ஒருவித வாயுக்களால் நிரப்பப்பட்ட பல்புகளை கொண்டிருக்கும்.
இந்த நியான் விளக்குகள் ஒருவகை கேத்தோடு வாயுக்களின் மூலமாக ஒளியை வெளிப்படுத்துகிறது.இதனுடைய முனைகள் அனைத்தும் உலோக மின்முனையுடன் சீல் செய்யப்பட்ட கண்ணாடி குழாய்கள் உடையது.குறைந்த அழுத்தத்தில் பல வாயுக்களை ஒன்றாகும் திறன் பெற்றவை.
அதிக திறன் அதாவது பல ஆயிரம் வோல்ட்களை நியான் குழாயில் உள்ள மின்முனைகளின் வழியாக செலுத்தும் பொது, இது வண்ண ஒளியை ஏற்படுத்துகிறது.
இதனுடைய வரலாறு மற்றும் அறிவியல்:
இந்த நியான் ஒளியானது 1898-ம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளான வில்லியம் ராம்சே மற்றும் மோரிஸ் டபிள்யூ. ட்ராவ்ர்ஸ் ஆகியோரால் கண்டு பிடிக்கப்பட்டது.
இன்று நாம் போர்ட்டுகளில் பயன்படுத்தும் விளக்குகளும் இந்த வகையை சார்ந்தவையே.
ராம்சே மற்றும் டிராவர்ஸ் வளிமண்டலத்தில் இருந்து தூய நியான்-ஐ பெறுவதில் வெற்றிபெற்றதை அடுத்து அதன் பண்புகளை ஆராய்ந்து புல்புகளின் மூலம் மின்வாயுவோடு வெளியேற்ற திட்டமிட்டனர், அதன் விளைவாக தான் இன்று நாம் வெவ்வேறு விதமாக நியான் ஒலிகளை பயன்படுத்துகிறோம்.
இப்பொழுது நாம் நம்முடைய விசயத்திற்கு வருவோம்:
இத்தகைய சிறப்பு கொண்ட இந்த நியான் ஒளியை நாம் நம்முடைய போட்டோஷாப் மூலமாகவும் உருவாக்கலாம் என்பதுதான் தனிச்சிறப்பே.
ஆம், இன்று போட்டோஷாப்பில் இந்த நியான் ஒளியை நம்முடைய எழுத்துக்களுக்கும் உருவாக்கலாம், ஆனால் நாம் இன்று இந்த வீடியோவில் பார்க்க இருப்பது நமது போட்டோவிற்கு இத்தகைய நியான் ஒளியை எப்படி உருவாக்கலாம் என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
மேலும் இதே நியான் எபக்ட்ஸ்-ஐ போட்டோஷாப்பில் நாமாக உருவாக்க அதிக நேரம் ஆகும், ஆகவே இதே நியான் எபக்ட்ஸ்- ஐ ஒரு ஆக்ஷன் மூலமாகவே எளிதாக உருவாக்கிட முடியும், அதற்கான ஆக்ஷன் -ஐ தான் இன்று உங்களுக்கு வழங்குகிறேன்.
முதலில் கீழே உள்ள 'Download Now' லிங்க் மூலமாக இந்த நியான் லைட்டிங் போட்டோ எபெக்ட் ஆக்ஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு:
- உங்களுடைய போட்டோவை குறைந்தபட்சம் 3000 pixel என்ற அளவிற்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.
- உங்களுடைய போட்டோஷாப் வெர்சன் மொழி ஆங்கிலத்தில் இருக்கிறதா என பார்க்கவும், இது மிக முக்கியமாக செக் செய்து கொள்ளவும்.இல்லையென்றால் இது வேலை செய்யாது.
- போட்டோஷாப் கலர் மோட் RGB கலர் மற்றும் 8 பிட்ஸ் /சேனல் -ல் உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்.
- இறுதியாக லேயர் பேனலில் உள்ள மூன்று வரிகளை கிளிக் செய்து பேனல் அப்சனில் 'Add "copy" to copied Layers and Groups' என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
- அடுத்து இந்த ஆக்ஷனை உங்கள் போட்டோஷாப்பில் லோட் செய்யவும்.
- உங்களுடைய போட்டோவை போட்டோஷாப்பில் ஓபன் செய்து ஆக்ஷனை பிளே செய்யவும்.
இறுதியாக உங்களுக்கு தேவையான நியான் எபெக்ட் மனிபுலேஷன் போட்டோ கிடைத்துவிடும்.